சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! தேர்ச்சி விகிதம் இதோ!
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனிடையே நேற்று சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 99.28% தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் முதலிடத்திலும், 98.95% தேர்ச்சி பெற்று சென்னை இரண்டாவது இடத்திலும், 98.23% தேர்ச்சி பெற்று பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது.