#BREAKING: CBSE 10-ஆம் வகுப்பு- சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்..!

சர்ச்சைக்குரிய ஆங்கிலக் கேள்வி, சிபிஎஸ்இ வினாத்தாளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.

சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் கணவனுக்கு மனைவி பேச்சை கேட்டால்தான் குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்படிவார்கள் என்றும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்துவிடுகிறது என்பது போன்ற கருத்துகள் வினாத்தாளில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாலின பாகுபாடு ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய ஆங்கிலக் கேள்வி, வினாத்தாளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. மேலும்,  சர்ச்சைக்குரிய கேள்விக்கான முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 12 ஆம் வகுப்பு சமூகவியல் தேர்வில், குஜராத் கலவரம் குறித்து  கேள்வி விதிமுறைகளுக்கு எதிரானது என சிபிஎஸ்இ நிர்வாகம் ஒப்புக்கொண்டது என்பது  குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்குரிய கேள்விக்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று மக்களவையில் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்