CBSE 2023: 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு
இன்று வெளியிடப்பட்ட மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) போர்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் 92.71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாக பதிவாகியுள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பில் 1,34,797 மாணவர்கள் 90 சதவீதம் மற்றும் 33,432 மாணவர்கள் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு கம்பார்ட்மென்ட் தேர்வு, 2வது பருவத் தேர்வுகளின் பாடத்திட்டத்தில் ஆகஸ்ட் 23 முதல் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிக்கை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு கம்பார்ட்மென்ட் தேர்வுகளுக்குத் தயாராவதன் மூலம் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த முடியும்.
கம்பார்ட்மென்ட் தேர்வுகளில் மாணவர்கள் ஒரு பாடத்தில் தங்கள் செயல்திறனை மேம்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். தேர்ச்சி பெற முடியாத மாணவர்களும், தோல்வியுற்ற பாடத்தில் தங்கள் செயல்திறனை மேம்படுத்த கம்பார்ட்மென்ட் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மேலும் கூறியது.
கம்பார்ட்மென்ட் தேர்வுக்கான படிவங்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் cbse.gov.in இல் கிடைக்கும். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு 2023 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15, 2023 அன்று தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.