சிபிஎஸ்இ 2022 : முதலிடத்தில் இரண்டு மாணவிகள்.! 5 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு…

Default Image

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் தன்யா சிங் மற்றும் யுவக்ஷி விக் ஆகிய இரு மாணவிகள் முதலிடம்.

2022ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) இன்று வெளியிட்டது. மாணவர்கள் cbse.gov.in மற்றும் cbseresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும், UMANG செயலி, டிஜிலாக்கர் மற்றும் எஸ்எம்எஸ் மூலம், மாணவர்கள் தங்கள் முடிவுகளை அறியலாம். இந்த ஆண்டு CBSE 12ம் வகுப்பு தேர்வில் 92.71% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பின் மொத்த தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், CBSE 12 ஆம் வகுப்பு முடிவுகள் 2022 ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் 6.66 சதவீதம் குறைந்துள்ளது. சிபிஎஸ்இ தேர்வில் 98.82% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடமும், 98.16% தேர்ச்சியுடன் பெங்களூரு இரண்டாம் இடத்திலும், 97.79% தேர்ச்சியுடன் சென்னை 3வது இடத்திலும் உள்ளன.

இந்த நிலையில், 2022 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் தன்யா சிங் மற்றும் யுவக்ஷி விக் ஆகிய இருவரும் 5 பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர். அதன்படி, 500 சரியான மதிப்பெண்களுடன், உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த தன்யா சிங், CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2022-இல் 5 பாடங்களிலும் தலா 100 என 500/500 மதிப்பெண்களைப் பெற்று நாட்டின் முதல் இடத்தைப் பிடித்தார்.

இதுபோன்று நொய்டாவைச் சேர்ந்த யுவக்ஷி விக் (17) என்ற மாணவி சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் ஐந்து பாடங்களிலும் தலா 100 என 500/500 மதிப்பெண்களைப் பெற்று நாட்டின் முதல் இடத்தைப் பிடித்தார். நொய்டாவின் அமிட்டி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி யுவக்ஷி, சிபிஎஸ்இ தேர்வில் ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், உளவியல் மற்றும் ஓவியம் ஆகிய தாள்களுக்குத் தேர்வாகியிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியானபோது, அனைத்திலும் 100 மதிப்பெண்கள் பெற்றதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்