#BREAKING: சிபிஎஸ்சி +12 தேர்வு ரத்து.., மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி..!
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். ஆனால், 12-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனால், பெற்றோர்களும் மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசு பொதுத்தேர்வை ரத்து செய்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் எதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து 3 வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறைந்தது 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தினமும் இது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் இந்த ஆலோசனை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.