சிபிஎஸ்இ 11 ஆம் வகுப்பு மாணவர்கள் எந்தவொரு பாடத்தையும் தேர்வு செய்யலாம்..!

Published by
Dinasuvadu desk

கொரோனா தொற்றுநோய் காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை எப்படி வழங்கவேண்டும் என்பதற்க்கான வழிமுறைகளை சிபிஎஸ்இ சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஓவ்வொரு பாடத்திற்கும் அதிகபட்சம் 100 மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். சிபிஎஸ்இ வாரியத்தின் படி, 20 மதிப்பெண்கள் செய்முறை தேர்விற்கும், 80 மதிப்பெண்கள் வாரிய தேர்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு  ஜூன் 20 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவு வெளியான பிறகு சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடங்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் 11 ஆம் வகுப்புக்கான பிரிவை தேர்ந்தெடுப்பது குறித்து குழப்பமடைகிறார்கள். அதிலும் குறிப்பாக பல மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் எந்தவொரு பாடத்தையும் தேர்வு செய்ய முடியுமா? என கேட்கிறார்கள்.

இதற்கு சிபிஎஸ்இ தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்11-ஆம் வகுப்பில் புதியதாக சேர்க்கை பெறும் மாணவர்கள் கலை, அறிவியல், வர்த்தகம் போன்ற எந்தவொரு பாடத்தையும் தேர்வு செய்யலாம்.

மாணவர்கள் எந்தவொரு பாடத்தையும் எந்தவொரு கட்டாயம் இல்லாமல் படிக்க  அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே பள்ளிகளும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிபிஎஸ்இ அதிகாரி கூறுகையில் இந்த முடிவு புதியதல்ல, மாணவர்களின் நலனுக்காக மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் மாணவர்களை இந்த பாடங்களை தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுமாட்டாது. மாணவர்கள் தங்கள் விருப்பப்படி பாடங்களை தேர்வு செய்யலாம். ஒரு மாணவர் ஒரு மொழிப்பாடம் , நான்கு விருப்பமான பாடங்களை எந்தவொரு கலவையிலும் தேர்வு செய்யலாம். அது பள்ளியில் கற்பிக்கப்படுவதை பொறுத்தது.

கூடுதலாக ஆறாவது பாடத்தை தேர்வு செய்யும்போது பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் படி மாணவர் விருப்பமான பாடத்தை தேர்வு செய்யலாம்.

Published by
Dinasuvadu desk
Tags: CBSE

Recent Posts

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

2 mins ago

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

57 mins ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

1 hour ago

கங்குவா பாடலில் அந்த மாதிரி காட்சி! வெட்டி தூக்கிய சென்சார் குழு?

சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…

1 hour ago

நாமக்கலில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…

1 hour ago

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

2 hours ago