சிபிஎஸ்இ 11 ஆம் வகுப்பு மாணவர்கள் எந்தவொரு பாடத்தையும் தேர்வு செய்யலாம்..!
கொரோனா தொற்றுநோய் காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை எப்படி வழங்கவேண்டும் என்பதற்க்கான வழிமுறைகளை சிபிஎஸ்இ சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஓவ்வொரு பாடத்திற்கும் அதிகபட்சம் 100 மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். சிபிஎஸ்இ வாரியத்தின் படி, 20 மதிப்பெண்கள் செய்முறை தேர்விற்கும், 80 மதிப்பெண்கள் வாரிய தேர்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 20 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவு வெளியான பிறகு சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடங்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் 11 ஆம் வகுப்புக்கான பிரிவை தேர்ந்தெடுப்பது குறித்து குழப்பமடைகிறார்கள். அதிலும் குறிப்பாக பல மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் எந்தவொரு பாடத்தையும் தேர்வு செய்ய முடியுமா? என கேட்கிறார்கள்.
இதற்கு சிபிஎஸ்இ தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்11-ஆம் வகுப்பில் புதியதாக சேர்க்கை பெறும் மாணவர்கள் கலை, அறிவியல், வர்த்தகம் போன்ற எந்தவொரு பாடத்தையும் தேர்வு செய்யலாம்.
மாணவர்கள் எந்தவொரு பாடத்தையும் எந்தவொரு கட்டாயம் இல்லாமல் படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே பள்ளிகளும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிபிஎஸ்இ அதிகாரி கூறுகையில் இந்த முடிவு புதியதல்ல, மாணவர்களின் நலனுக்காக மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில் மாணவர்களை இந்த பாடங்களை தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுமாட்டாது. மாணவர்கள் தங்கள் விருப்பப்படி பாடங்களை தேர்வு செய்யலாம். ஒரு மாணவர் ஒரு மொழிப்பாடம் , நான்கு விருப்பமான பாடங்களை எந்தவொரு கலவையிலும் தேர்வு செய்யலாம். அது பள்ளியில் கற்பிக்கப்படுவதை பொறுத்தது.
கூடுதலாக ஆறாவது பாடத்தை தேர்வு செய்யும்போது பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் படி மாணவர் விருப்பமான பாடத்தை தேர்வு செய்யலாம்.