இன்று சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலிமூலம் பேசினார். அப்போது, வருகின்ற பிப்ரவரி 2-ஆம் தேதி CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது. பின்னர், ஜூன் மாதம் முதல் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தி வருகிறது.
இதனால், அந்தந்த மாநிலங்களில் உள்ள கொரோனா பாதிப்பை கொண்டு முதலில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. சில மாநிலங்களில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டது. இந்நிலையில், வருகின்ற மார்ச் மாதம் முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் பாடக்குறைப்பு இருக்கவேண்டும் என பெற்றோர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும். இந்த பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஏற்றவாறு இருக்கும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…