இனி புத்தகத்தை பார்த்தே மாணவர்கள் தேர்வு எழுதலாம்! வருகிறது அதிரடி திட்டம்

புத்தகத்தை பார்த்து மாணவர்கள் தேர்வு எழுதும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி, 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி, பாடப்புத்தகத்தைப் பார்த்தே தேர்வுகளில் விடை எழுதும் ‘Open book’ தேர்வு முறையை கொண்டு வர மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த தேர்வு முறையானது சோதனை முயற்சியாக வரும் கல்வியாண்டின் நவம்பர் மாதத்தில் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

புத்தகத்தைப் பார்த்து எழுதும் தேர்வில், மாணவர்கள் தங்கள் குறிப்புகள், பாடப்புத்தகங்கள் அல்லது பிற ஆய்வுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் தேர்வின் போது அவற்றைப் பார்த்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள்.

குஜராத்தில் ரூ.13,500 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

‘Open book’ தேர்வு முறைப்படி 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களையும், 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு உயிரியல், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களையும் பார்த்து எழுத அனுமதிக்கப்படுவார்கள். முன்னதாக கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத காலக்கட்டத்தில், கடும் எதிர்ப்பையும் மீறி புத்தகத்தை பார்த்து எழுதும்படி, டெல்லி பல்கலைக்கழகம் முயற்சியை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்