அகிலேஷ் யாதவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ..!
Akhilesh Yadav: சட்டவிரோத சுரங்க வழக்கில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இன்று (புதன்கிழமை) சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ கடந்த 2019 ஜனவரி 2-ஆம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.
READ MORE- பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!
உ.பி.யில் நடந்த சட்டவிரோத சுரங்க வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அகிலேஷ் யாதவுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் நாளை டெல்லியில் சிபிஐ முன் ஆஜராகி வழக்கு தொடர்பான சில கேள்விகளுக்கு பதிலளிக்க அகிலேஷ் யாதவ் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
READ MORE- பிரதமர் உரை… அதுதான் அவர்களுக்கு தெரிந்த நாகரீகம்.! கனிமொழி எம்பி பேட்டி.!
அகிலேஷ் யாதவ் 2012 முதல் 2017 வரை உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகவும், 2012 முதல் 2013 வரை மாநிலத்தின் சுரங்கத் துறை அமைச்சராகவும் இருந்தார். டெல்லியில் கலால் கொள்கை அமல்படுத்தியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் , டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8-வது சம்மன் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.