56 அரசியல்வாதிகள் மீது சிபிஐ வழக்கு..!
நாடாளுமன்ற இரு அவைகளிலும் குளிர்க்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக இன்றும் கூட்டத்தொடர் நடைபெற்றது. இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வ பதிலளித்தார். கடந்த 3 வருடங்களில் அரசியல்வாதிகள் மீது 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 26 வழக்குகள் விசாரணையில் ஏற்பதாகவும் , 11வழக்குகள் தொடக்க கட்ட விசாரணையில் இருப்பதாகவும் , 11 வழக்குகள் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும் ஒரு வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறினார். அவர் கொடுத்த தகவலின் 2016 -ம் ஆண்டு 11 வழக்குகளும் , 2017-ம் ஆண்டு 18 வழக்குகளும் 2018-ம் ஆண்டு 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் அக்டோபர் 31-ம் தேதி வரை 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.