ஜெட் ஏர்வேஸ் நிறுவன இடங்களில் சிபிஐ திடீர் சோதனை!
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.
ஜெட் ஏர்வேஸ் அலுவலகங்கள், வீடுகளில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மும்பை உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் ரூ.538 கோடி வங்கி மோசடி செய்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கனரா வங்கியின் புகாரின் பேரில் கோயல், அவரது மனைவி அனிதா, முன்னாள் இயக்குநர் கவுரங் ஆனந்த ஷெட்டி மற்றும் வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், தனிநபர்கள் நிதியை திருப்பி அனுப்பியதாகவும், வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்துவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.