பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை என தகவல்.
சிபிஐ அதிகாரிகள் சோதனை:
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் வந்துள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்து சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கு:
ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதன்பின், ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவிக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். லாலு பிரசாத் யாதவ் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் விசாரணை:
முன்னதாக 2021-ஆம் ஆண்டில், யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்கக்கூடிய உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கண்டறிந்ததை அடுத்து, வழக்கை முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பரில், முன்னாள் முதல்வர் மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ மீண்டும் விசாரணை செய்து வருகிறது. குற்றப்பத்திரிகையின்படி, யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது நிலத்திற்குப் பதிலாக வேலை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…