புதிய மதுபான கொள்கை சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் 9 மணிநேரமாக அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நேற்று விசாரணை நடத்தினர்.
டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இது 800க்கும் மேற்பட்ட புதிய மதுபான கடைகளுக்கு டெல்லி மாநில அரசான அரவிந்த் கெஜ்ரிவால் அரசு உரிமம் வழங்கியது. இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் உடனடியாக மதுபான கொள்கையானது திரும்ப பெறப்பட்டது. இதில் அரசுக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், 100 கோடி ரூபாய் அளவில் பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் சிபிஐ மற்றும் அமலக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணீஷ் சிசோடியா கைது :
இந்த விசாரணையில், இந்த மதுபான கொள்கை மூலம் ஊழல் நடந்து அந்த ஊழல் பணமானது கோவா சட்டசபை தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்தது. இதன் அடிப்படையிலான விசாரணையில் மதுபான கொள்கையை அறிவித்த டெல்லி துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா, பல கட்ட விசாரணைக்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
கெஜ்ரிவால் ஆஜர் :
அதனை அடுத்து டெல்லி புதிய கொள்கை தொடர்பாக விசாரணைக்கு வருமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவர் உடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் சிங் இ; உள்ளிட்ட முக்கிய ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினர் உடன் சென்றார்.
போராட்டம் :
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லியில் பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரான சிபிஐ அலுவலகத்தின் முன்பும், ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிபிஐ அலுவலகம் முன்பு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு கெஜ்ரிவால் விசாரணை முடிந்த பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ஆதாரம் இல்லை :
சிபிஐ விசாரணைக்கு சென்ற அரவிந்த் கேஜ்ரிவாலிடம் அதிகாரிகள் சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை குறித்து வெளியில் வந்த அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், தன்னிடம் சிபிஐ மொத்தம் 56 கேள்விகளை கேட்டனர். அனைத்தும் போலியானது. இந்த வழக்கு போலியானது. எங்களுக்கு எதிராக அவர்களிடம் ஒரு ஆதாரம் கூட இல்லை.’ என கூறினார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு முடிவு .?
மேலும், அவர் கூறுகையில் இந்த மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் என்பது பொய்யானது. நேர்மை தான் எங்கள் சித்தாந்தம். நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களது நேர்மையுடன் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நல்ல வளர்ச்சி பணிகளை இழிவுபடுத்துவதற்காகவே இதை எல்லாம் சிலர் செய்கிறார்கள். நாம் (ஆம் ஆத்மி கட்சி) தற்போது தேசிய கட்சியாக மாறிவிட்டோம். அதனால், தற்போது நம்மளை முடிவுக்கு கொண்டு வர சிலர் இதனை செய்கிறார்கள். என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…