3.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட மேலாளரை பொறி வைத்து பிடித்த சிபிஐ அதிகாரிகள்.!
3.5 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட ராஜஸ்தானில் செயல்பட்டு வந்த பவர் பிளான்ட் மேலாளரை சிபிஐ அதிகாரிகள் பொறிவைத்து பிடித்து கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் பலோடி எனும் ஊரில் செயல்பட்டு வரும் நேஷனல் தெர்மல் பவர் ப்ளண்ட் கார்பரேஷனில் மேலாளராக பணியாற்றி வந்த ஓம் பிரகாஷ், கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட குளறுபடியை சமாளிக்க 3.5 லஞ்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனை அறிந்த சிபிஐ அதிகாரிகள், அவரை கையும் களவுமாக பிடிக்க 1 லட்சம் ரூபாயை லஞ்சமாக தருவதாக கூறி அவரை பொறியில் சிக்கவைத்து கைது செய்துள்ளனர்.
இது குறித்து, சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்கையில், கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய மேலாளர் ஓம் பிரகாஷ் 3.5 லஞ்சம் கேட்டதாகவும், அதனால் அவரை பிடிக்க 1 லட்சம் ரூபாய் லஞ்சம் தருவதாக கூறி, கையும் களவுமாக பிடித்ததாக கூறினர்.
மேலும், அவரை ஐபிசி சட்டம் 1988 பிரிவு 7 இன் படி கைது செய்துள்ளோம் எனவும் கூறினார். இவரை ஜோத்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தப்படுத்தினர்.