ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் 4-வது முறையாக வருகை!
ஐஎன்எக்ஸ் நிறுவனம் மீது 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு காரணமாக முன்ஜாமீன் கேட்டு, நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர்.ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.ஆனால் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் நேற்று முதல் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வீட்டிற்கு வந்து செல்கின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் 4-வது முறையாக வந்து உள்ளனர். 3-வது முறையாக காலை 8:10 மணி முதல் 8:45 மணி வரை வந்து சென்ற நிலையில் சிபிஐ அதிகாரிகள் தற்போது மீண்டும் ப.சிதம்பரம் வீட்டிற்கு வந்து உள்ளனர்.
மூன்று முறையும் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் 4-வது முறையாக மீண்டும் சிபிஐ வந்தனர்.