சிபிஐ(எம்) தலைவர் சுட்டுக் கொலை..! உள்ளூர் மக்கள் போராட்டம்..!

Subhash Munda

சிபிஐ(எம்) தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டம்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுபாஷ் முண்டா சுட்டுக் கொல்லப்பட்டார். ராஞ்சியில் உள்ள தலதாலி சௌக்கில் சிபிஐ(எம்) தலைவர் சுபாஷ் முண்டா தனது அலுவலகத்தில் இருந்துள்ளார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அவரை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் அப்பகுதியில் உள்ள கடைகளை சேதப்படுத்தினர் மற்றும் சாலையில் போக்குவரத்தைத் தடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, மக்கள் போராட்டம் நடத்தியதுடன், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட சுபாஷ் முண்டா இரண்டு முறை ஹதியா தொகுதியிலும், மாந்தர் தொகுதியில் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்