Categories: இந்தியா

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணை…!10 நாட்களுக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!

Published by
Venu

ஊழல் கண்காணிப்பு ஆணையம் 10 நாட்களுக்குள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கோகாய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிகார மோதலால்  சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவும்  சி.பி.ஐ துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானா ஆகியோரை விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து உத்தரவிட்டது மத்திய அரசு.
இதைத்தொடர்ந்து கட்டாய விடுப்பை எதிர்த்து சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணண் கோரிக்கை வைத்தார்.
Related image
பின்னர் இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சய் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது.
விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கோகாய்,ஊழல் கண்காணிப்பு ஆணையம் 10 நாட்களுக்குள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணையை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.ஆனால் இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் 10 நாட்களுக்குள் விசாரணையை முடிப்பது கடினம்  என்று தெரிவித்தார்.இதற்கு பதில் கூறிய தலைமை நீதிபதி சரி, 240 மணி நேரம் தருகிறோம், முடித்துவிடுங்கள் என்று தெரிவித்தார்.அதேபோல் விசாரணை நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள் குறித்த தகவல்களை சீலிடப்பட்ட கவரில் சிபிஐ ஒப்படைக்க வேண்டும்.மேலும்  சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்னாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வழக்கை நவம்பர் 12 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கோகாய்.
 
 

Published by
Venu

Recent Posts

“இந்த படம் எனக்கு ஸ்பெஷல்”…லப்பர் பந்து பார்த்துவிட்டு அஸ்வின் சொன்ன விமர்சனம்!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு…

9 mins ago

பாலியல் வழக்கு: நடிகர் சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்த கேரள உயர்நீதிமன்றம்.!

கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல்…

40 mins ago

மணிமேகலை விஷயத்தில் கதறி அழுத பிரியங்கா! உண்மையை உடைத்த வனிதா!

சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…

1 hour ago

உதயநிதிக்கு கிரீன் சிக்னல்.? “ஏமாற்றம் இருக்காது” மு.க.ஸ்டாலின் ‘பளீச்’ பதில்.!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…

1 hour ago

INDvsBAN : 2-வது டெஸ்ட் போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வானிலை அறிக்கை கூறுவது என்ன?

கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…

1 hour ago

மெய்யழகனுக்கு U சான்றிதழ்… போர் அடிக்காமல் காப்பாத்துவாரா இயக்குனர்.?

சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…

2 hours ago