மதுபான கொள்கை வழக்கு.! கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ.!
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பெயரில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
தற்போது, டெல்லி திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலை அதே மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ கைது செய்துள்ளது. முன்னதாக, இதற்கான ஆதாரங்களை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிபிஐ இன்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கடந்த வியாழன் அன்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது, பின்னர் அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி அரவிந்த் கெஜ்ரிவால் ஜமீனுக்கு இடைக்கால தடை பெற்றது. மேலும், நேற்று ஜாமீன் மனு மீதான விசாரணையில் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த ஜமீனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.