மேற்குவங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்!!உச்ச நீதிமன்றத்தில்  சிபிஐ மனு

Default Image

காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றத்தில்  சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க, அவருடைய இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அப்போது, காவல்துறையினர், சிபிஐ அதிகாரிகளை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் குதித்தார்.

Image result for சிபிஐ மம்தா

சிபிஐ மூலம், மத்திய அரசு தங்களை மிரட்ட முயல்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பதட்டமான சூழ்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், மத்திய ரிசர்வ் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த பரபரப்பான சம்பவம் தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ், அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, சிறைபிடிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றத்தில்  சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.மேலும்  நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க கொல்கத்தா காவல் ஆணையருக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளது சிபிஐ .

நேற்று இரவு முதல் தொடர்ந்து 2வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy