ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா விசாரிக்க மறுப்பு தெரிவித்து தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றுவதாக தெரிவித்தார்.
ஆனால் தலைமை நீதிபதி அமர்வும் உடனே இந்த மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் சிதம்பரம் மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்து விட்டது.இந்த நிலையில் சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவில், எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…