துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல் விதிப்பு!
மணிஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என சிசோடியா தரப்பு வழக்கறிஞர் வாதம்.
சிபிஐ காவல் விதிப்பு:
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 5 நாள் காவலில் மணிஷ் சிசோடியாவை விசாரிக்க அணுமதிகோரி டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது எழுப்பிய கேள்விகளுக்கு மணிஷ் சிசோடியா முறையாக பதிலளிக்காததால் சிபிஐ தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
சிபிஐ விசாரணை:
மணிஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என சிசோடியா தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்துள்ளார். இந்த வாதங்கள் முடிந்த நிலையில், மணிஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா சுமார் 8 மணிநேரம் சிபிஐ விசாரணைக்கு பின் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி:
கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்பதால் 5 நாள் காவலில் மணிஷ் சிசோடியாவை விசாரிக்க அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. அதன்படி, புதிய மதுமான கொள்கை முறைகேடு புகாரில் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில், மணிஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ளது.