தேசிய பங்கு சந்தையின் (NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டு வந்த போது, இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம் பல்வேறு ஆலோசனைப் பெற்று தேசிய பங்கு சந்தையில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பங்குச்சந்தை குறித்த ரகசிய தகவல்களை சாமியாரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சாமியார் ஆலோசனைபேரில் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை திட்ட ஆலோசகராக நியமனம் செய்து, அவருக்கு பல முறை ஊதிய உயர்வை சித்ரா வழங்கினார் என செபியால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதன்காரணமாக, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதம் மற்றும் பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகள் தடையை செபி விதித்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடைபெற்றது. அதன்பின்னர், சித்ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதன்காரணமாக முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், சித்ராவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சித்ரா ராமகிருஷ்ணா நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தேசிய பங்குசந்தை தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாட்கள் சிபிஐ காவல் எடுத்து விசாரிக்க கொடுக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் சிபிஐ கோரிய நிலையில் 7 நாள்கள் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் ஆனந்த் சுப்பிரமணியம் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி சிபிஐஅதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது கூறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…