சிதம்பரத்தை அக்டோபர் 3 வரை திகார் சிறையிலடைக்க உத்தரவு-நீதிமன்றம் அதிரடி
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அக்டோபர் 3 வரை திகார் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.சிபிஐ காவலில் வைத்து சிதம்பரத்தை விசாரணை செய்து வந்தது.பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் கடந்த 5-ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.ஆஜரான அவருக்கு சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 19 -ஆம் தேதி வரை (அதாவது இன்று வரை )திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது.
இன்றுடன் சிதம்பரத்தின் காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தரப்பில் சிதம்பரத்தின் காவலை நீடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.பின் ப.சிதம்பரத்தை அக்டோபர் 3 வரை திகார் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.