ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது சிபிஐ நீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.சிபிஐ காவலில் வைத்து சிதம்பரத்தை விசாரணை செய்து வந்தது.பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.ஆஜரான அவருக்கு சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 19 -ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது.
பின்னர் சிதம்பரத்தின் காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தரப்பில் சிதம்பரத்தின் காவலை நீடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.பின் ப.சிதம்பரத்தை அக்டோபர் 3 வரை திகார் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனை தொடர்ந்து இன்று அவர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.அவர் வாதிடுகையில்,சிதம்பரத்தின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு வீட்டு உணவுக்கு அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.இறுதியாக ப.சிதம்பரத்திற்கு அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்தது சிபிஐ நீதிமன்றம்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…