மகாராஷ்ராவில் நுழைய தடை..தாக்கரே தடால்!
மஹாராஷ்டிராவில் சி.பி.ஐ நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது
மாநிலத்தின் குறிப்பிட்ட சில முக்கிய வழக்குகளை விசாரிக்க மகாராஷ்டிரா
அரசு மத்திய புலனாய்வு சபை எனப்படும் (சிபிஐ)க்கு அளித்த ஒப்புதலை வாபஸ்
பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா அரசு கடந்த புதன்கிழமை மத்திய புலனாய்வுப்பிரிவுக்கு
(சிபிஐ)க்கு அளித்த பொது ஒப்புதலை வாபஸ் பெற்றது.இதனால் சிபிஜ
மாநில அரசின் அனுமதியின்றி நுழைய முடியாது.
சிபிஐ நுழைய தடை விதிக்கும் நடவடிக்கையை மேற்கு வங்கம்
மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக எடுத்த மூன்றாவது
மாநிலம் மகாராஷ்டிரா என்பது குறிப்பிடத்தத்து.
Republic செய்தி நிறுவனம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் டிஆர்பி ஊழலில்
சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த ஒரு நாள் கழித்து தாக்கரே அரசு
இந்நடவடிக்கை எடுத்துள்ளது.
அக்.,8 ம் தேதி Republic செய்தி நிறுவனம் மீது மும்பை போலீசா வழக்கு பதிந்து
இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். உத்தரபிரதேசத்தில் தாக்கல் செய்யப்பட்ட
எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் விசாரணையை சி.பி.ஐ செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் வழக்குகளை விசாரிக்க மகாராஷ்டிரா அரசு சிபிஐ க்கு அளித்த ஒப்புதலை வாபஸ் பெற்றுள்ளது.
இது குறித்து அம்மாநில பிஜேபி தலைவர் ராம் கதம் கூறுகையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வழக்கு விவகாரத்தில் உண்மைகளை
மறைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
உண்மை வெளிவருவதற்கு மகாராஷ்டிரா அரசு பயப்படுவதாகவும், மகாராஷ்டிரா அரசாங்கம் என்ன அஞ்சுகிறது என்று ஆச்சரியப்படுவதாகவும் ராம் கதம் கூறினார்.
இதற்கிடையில், சிவசேனா தலைவரும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரவுத் இது குறித்து கூறுகையில், ஒரு மாநிலம் சிபிஐக்கு தடை விதித்தால், மாநில உள்துறை அமைச்சகம் மாநில அரசின் முடிவு காரணம் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்.