நிரவ் மோடி கூட்டாளியான சுபாஷ் பராப்பை கைது செய்து இந்தியா கொண்டு வந்தது சிபிஐ!

நிரவ் மோடியின் கூட்டாளி பராப் சுபாஷ் சங்கரை எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சிபிஐ அழைத்து வந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தது தொடர்பாக, முன்னாள் ஊழியரும், தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளருமான சுபாஷ் பராப்பை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது. பிரபல தொழிலதிபர் நிரவ் மோடியின் கூட்டாளி பராப் சுபாஷ் சங்கரை எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சிபிஐ அழைத்து வந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றிருந்தார். 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மோசடி செய்யப்பட்ட பின்னர் இந்தியாவை விட்டு வெளியேறிய பராப், எகிப்தில் உள்ள கெய்ரோவில் இருந்து சிபிஐயால் மீண்டும் இந்தியா அழைத்து வரப்பட்டார். நிரவ் மோடியின் ஃபயர்ஸ்டார் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (FIPL) நிறுவனத்தில் பணிபுரியும் 50 வயதான பராப், எகிப்திய வைர வியாபாரி கூட்டாளிகளுடன் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025