மத்திய பணியாளர்த்துறை அமைச்சகம் சிபிஐ அமைப்பிற்கு புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால்-ஐ நியமித்துள்ளது.
சுபோத் குமார் ஜெய்ஸ்வால் கடந்த 1985 ஆம் ஆண்டு ஐபிஸ் அதிகாரியாக பணிபுரிந்தார். இவர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர். மேலும், இவர் இம்மாநில காவல் டிஜிபி ஆகவும் பணிபுரிந்துள்ளார். இப்போது இவரை இரண்டு ஆண்டுகளுக்கு சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக அறிவித்துள்ளனர். இந்த முடிவை பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன்சவுத்ரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் கலந்தாலோசித்து நியமித்தனர்.
ஆனால், இதில் எதிர்க்கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன்சவுத்ரி இந்த ஆலோசனைக்கூடத்தில் எடுக்கப்பட்ட தேர்வு முறை சரியில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இவர் அளித்த பேட்டியில், சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் கமிட்டியின் விதிமுறைக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது இந்த முடிவு. நான் கடந்த 11ஆம் தேதியே 101 பேர் அடங்கிய பட்டியலை வழங்கினேன். அதில் 10 பேரை மட்டும் பட்டியலிட்டு, அதன் பிறகு அதில் மாலை 4 மணிக்கு 6 பேர் மட்டுமே அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். மத்திய பணியாளர்த்துறை அமைச்சகத்தின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளனர்.
மேலும், கடந்த பிப்ரவரி மாதமே சிபிஐ இயக்குனராக இருந்த ரிஷி குமார் சுக்லா ஓய்வு பெற்று சென்றுவிட்டார். அடுத்த 3 மாதங்களாக குஜராத் பிரிவின் ஐபிஸ் அதிகாரியான பிரவீன் சின்ஹா பொறுப்பு இயக்குனராக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…