சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இல்லத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் குழுவினருடன் ஆய்வு செய்து வருகின்றனர்.
தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், ஜூன் மாதம், 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் உயிரிழந்த வழக்கில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் காவல் நிலையத்தில் சுஷாந்த்தின் தந்தை புகாரளித்தார்.
இதனால், பீகார் போலீசார் தனிப்படை அமைத்து மும்பையில் விசாரணை நடத்தியது. ஆனால், மும்பை போலீசார் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பீகார் போலீசார் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், சுஷாந்த்தின் தந்தை, சுஷாந்தின் மரணத்திற்கு நீதி கேட்டு, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் மனு கொடுத்தார்.
இதன்காரணமாக, சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு கோரிக்கை வைத்தது. மத்திய அரசு சுஷாந்த் சிங் வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்தது. சுஷாந்தின் மரண வழக்கு தொடர்பாக அவரின் காதலி ரியா சக்ரவர்த்தி, இந்திரஜித் சக்ரவர்த்தி, சந்தியா சக்ரவர்த்தி, சாமுவேல் மிராண்டா, ஸ்ருதி மோடி மற்றும் பலர் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார், மும்பையில் உள்ள நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டில் தடயவியல் குழுவினருடன் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…