சிபிஐ உச்சநீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைத் திரும்பப் பெறக் கோரிப் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.
இந்நிலையில் சிறையில் உள்ள பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது வாக்குமூலத்தை விசாரணை அதிகாரி தவறாகப் பதிந்ததன் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தண்டனை அளித்த தீர்ப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கு 3வாரங்களில் பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில் கருணை மனுக்களைப் பரிசீலனை செய்யத் தாமதமானதால்தான் பேரறிவாளனின் தண்டனை குறைக்கப்பட்டதே ஒழிய, விசாரணையில் குறைகள் காணப்பட்டதால் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
பேரறிவாளனின் மறு ஆய்வு மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டித் தீர்ப்பை மீண்டும் மறு ஆய்வு செய்யக் கூடாது என வலியுறுத்தியுள்ளது. இதனால் பேரறிவாளனின் மனுவைத் தள்ளுபடி செய்து அவருக்குப் பெருந்தொகை அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…