புதுச்சேரி ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துருஜி கைதாக போலீசார் டீல் பேசியதாகவும், அவர்களுக்கு சிபிசிஐடி உடந்தையாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி, தமிழகம், கேரள மாநிலத்தில் பொதுமக்களின் ஏ.டி.எம் கார்டுகளின் தகவல்களை திருடி பலகோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் அதிமுக பிரமுகர் சந்துருஜி மற்றும் என்.ஆர் காங்கிரஸ் சத்யா மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து 45 நாட்களுக்கு பிறகு என்ஆர் காங்கிரஸ் சத்யாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துருஜியை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை, அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. சந்துருஜி கைது செய்யப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் சந்துருஜிக்கு உடந்தையாக உள்ளதால் இதுவரை அவரை கைது செய்யவில்லை, எனவே தான் சந்துருஜி மற்ற மாநிலத்தில் தலைமறைவாக உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனை நிரூமிக்கும் வகையில் புதுச்சேரி காவல்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி காவல்துறையில் சில கருப்புஆடுகள் உள்ளனர் என்று தெரிவித்தார். கருப்பு ஆடுகளை கண்டுபிடித்த பின்னர் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். முதல்வரின் இந்த பேச்சு புதுச்சேரி காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சந்ததுருஜிக்கும், சிபிசிஐடி போலீசாருக்கும் இடையே சந்துருஜி வழக்கறிஞர் பாலமாக செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது. முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்துருஜி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரிக்கும் வரை சந்துருஜியை கைது செய்ய வேண்டாம் என்றும் முன்ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் சந்துரு சரண் அடைவார் என்று சிபிசிஐடியிடம் சந்துருஜி வழக்கறிஞர் டீல் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…
சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…