தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடக் கூடாது.! கர்நாடக விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்.!

Human Chain Protest

தமிழ்நாடு மற்றும் கர்நாடகக இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை என்பது தொடர்ந்து வருகிறது. இதில் தமிநாடு அரசு தங்களுக்கு காவிரில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுக்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பலமுறை வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது செப்-12ம் தேதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.

இதன்பின் செப்-12ம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெற்றது. அதில் காவிரியில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

குறைவான அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்ட காரணத்தினால், கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறப்பதை நிறுத்தியது. இதைத்தொடர்ந்து, அடுத்த 15 நாட்கள் தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுக்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையின் பேரில் கடந்த 18ம் தேதி தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடி 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம் எனவும் கூறினர். அதன்படி, காவிரியிலிருந்து 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின் போது, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு கேட்கவேண்டும் என்று நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடக மாநிலம் மாண்டியாவில் விவசாயிகள் மற்றும் கன்னட கன்னட ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து மனிதச் சங்கிலியை உருவாக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, மாநிலத்தில் இருக்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்