காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது…!
காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை, உச்சநீதிமன்ற உத்தரவுபடி திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசு சார்பில் கர்நாடக அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி, தண்ணீர் தர மறுப்பதாக குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் அடுத்த 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 88-வது கூட்டம், தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் 15 நாட்களுக்கு தினசரி 13000 கன அடி நீ திறக்க அறிவுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்த உள்ளதாகவும், காவிரியில் இருந்து நீர் திறக்க முடியாது என பேரவையில் தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.