காவிரி பிரச்சனை: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது ஆணையம்!

காவிரியில் உரிய நீரை திறக்க உத்தரவிட கோரும் தமிழக அரசின் மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளோம். கடந்த 30 ஆண்டுகள் சராசரியுடன் ஒப்பிட்டு, நீர் பற்றாக்குறையின் போது எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதாவது, 30 ஆண்டு சராசரி நீர் விருப்புடன் ஒப்பிட்டு பற்றாக்குறை கால பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி டெல்டாவில் உள்ள நிலத்தடி நீரையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. டெல்டா பகுதியில் நீர் பற்றாக்குறையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு நீர் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தி உள்ளதாகவும் காவிரி ஆணையம் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 12 முதல் 26ம் தேதி வரை 1.49 லட்சம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29 முதல் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5000 கன அடி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025