இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…!
இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்ரமணியன், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, காவிரியில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு, அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.அதேபோல் மேகதாது அணை பிரச்சினையும் எழுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.