பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று கால்நடை மேய்த்தவர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் விடுதலை!

கட்ச் நகரில் நானா தினாரா கிராமத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் சாமா, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று கால்நடை மேய்த்தவர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் விடுதலை.

கட்ச் நகரில் நானா தினாரா கிராமத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் சாமா. இவர் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு இடத்தில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டதுடன், அவர் உளவு பார்க்க வந்ததாகவும் கூறி அவரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக இஸ்லாமாபாத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் அவரை அழைத்து வர அமிர்தசரஸ் சென்றனர். அமிர்தசரஸ் அதிகாரிகள் அவருக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றைச் செய்தபின்,  அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிவித்தனர்.

சாமா அவர்கள் கூறுகையில், ‘நான் என் கால்நடைகளை மேய்க்கும் போது தவறாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டேன். அவர்கள் என்னை உளவாளி என்று நினைத்து கைது செய்த ஆறு மாதங்கள் சிறையில் அடைத்தநர். தற்போது என்னை விடுத்துள்ளனர்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்