சாதிய பாகுபாடு இந்து சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது.! – RSS பொதுச்செயலாளர்.!

RSS Chief secretary - Hosabale Dattatreya

குஜராத் மாநிலம், வதோதராவில் இந்துத்துவா அமைப்பானா ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய RSS பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே, ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் ஜாதி பாகுபாட்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘  அனைத்து இந்து கோவிலிலும் அனைவருக்கும் நுழைய உரிமை உண்டு. அனைத்து நீர் ஆதாரத்திலிருந்தும் தண்ணீர் எடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு. சாதி பாகுபாட்டின் பெயரால் இத்தகைய பாகுபாடுகளை நாம் சகித்துக் கொள்ளக்கூடாது, ஏனெனில் அது ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கும் சாதிய பாகுபாடு என்பது அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இத்தகைய நடைமுறைகளை நாம் ஒழிக்க வேண்டும்.

விஜய தசமியை முன்னிட்டு 14 மாவட்டங்களில் RSS பேரணி.! உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை.!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்களை வென்ற போது அவர்களின் சாதி அல்லது மதத்தைப் பற்றி யாரும் கேட்கவில்லை. மேலும் கோவிட்-19 ஊரடங்கின் காலத்தில் சாதி பாகுபாட்டை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் மக்கள் உதவினார்கள்.

அதேபோல், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளின் சாதி மற்றும் மதத்தைப் பற்றி மக்கள் விசாரிக்கவில்லை. நெருக்கடியின் போதும் அல்லது வெற்றியின் போதும் நம் நாடு ஒற்றுமையாக இருப்பதையே இது காட்டுகிறது. இந்த ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு உணர்வு நெருக்கடி அல்லது வெற்றியின் போது மட்டுமல்லாமல் எல்லா நேரத்திலும் இருக்க வேண்டும் என்று ஹொசபலே பேசினார்.

சிலர், சனாதன தர்மத்தை அழிப்பதாக கூறி மேடையில் மிரட்டுகிறார்கள். இந்துக்களை பற்றி பேசுவதால் ஆர்எஸ்எஸ் இந்துக்களுக்கான இயக்கம் போல சித்தரிக்க பார்க்கிறார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

சனாதன தர்மம் என்பது சடங்குகள்  பற்றியது அல்ல. அது இறை வழிபாட்டு முறைகளை பற்றியது. அது மனிதர்களிடத்தில் கடவுளை காண்பது. நல்ல நடத்தை மற்றும் சமூகத்தின் நலனை அடைவதற்கான வழிமுறைகளை கொண்டது என்றும் RSS பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே அந்த பொதுக்கூட்டத்தில் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்