குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வழக்குகள் – உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

Published by
Venu
  • குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
  • இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு  இன்று விசாரணை நடத்துகிறது.

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை  மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில்  மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது.இதனால் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.ஆனால் முதலில் வடக்கு மாநிலங்களில் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது .இதனை தொடர்ந்து  இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் மட்டும் அல்லாமல் நாட்டின் பல  இடங்களில் போராட்டம் வெடித்து வருகின்றது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் எனவே இந்த சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்  காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, அனைத்து அசாம் மாணவர் சங்கம், ரிகாய் பஞ்ச், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.மொத்தமாக  18 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுக்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி பாப்டே உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு  இன்று விசாரணை நடத்துகிறது.இந்த மனுக்களுடன் சேர்த்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வருகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Published by
Venu

Recent Posts

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

28 minutes ago

விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…

1 hour ago

மஞ்சனத்தி மரத்தில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…

2 hours ago

“பேரணி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…

2 hours ago

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம்… பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி!

சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…

2 hours ago

துவங்கியது இறுதி ஊர்வலம்… யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங் உடல் தகனம்.!

டெல்லி:  மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…

3 hours ago