Categories: இந்தியா

பன்னீர்செல்வம்  உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு …!வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் …!

Published by
Venu

பன்னீர்செல்வம்  உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
Related image

செப்டம்பர் 26 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
அதேபோல் தினகரன் அணி மேல்முறையீடு செய்யவில்லை,தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் என்றும் அறிவித்தது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

அந்த நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்டனர்.
இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்,பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் சபாநாயகர் இதுகுறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில் தகுதிநீக்கம் செய்வது சரியாக இருக்காது என்றும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தினகரன் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க பன்னீர்செல்வம் தரப்பு கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.திமுக மற்றும் டிடிவி தினகரன் தரப்பு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம்,பன்னீர்செல்வம்  உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது .

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

25 mins ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

1 hour ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

2 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago