வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 43 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு, விவசாயிகளுடன் 7 முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அது எதுவும் பலனளிக்கவில்லை. வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என விவசாயிகள் அமைப்புகள் கூறும் நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்ட பலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மேலும் விவசாயிகளின் போராட்டங்களை எதிர்த்து மூன்று பேர் மனுதாக்கல் செய்த நிலையில், நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், மத்திய அரசு நடத்தும் 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் சமூக முடிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்குகளை வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…