நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.
நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது ரூ.1.51 கோடி மோசடி புகாரில் மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. SFL ஃபிட்னஸ் என்ற உடற்பயிற்சி நிறுவனத்தை தொடங்க பணம் பெற்று கொண்டு மோசடி செய்துவிட்டதாக தொழிலதிபர் நிதின் பராய் என்பவர் அளித்த புகாரின் பேரில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஷில்பா மற்றும் அவரது கணவர் ராஜ் ஆகியோரால் தொடங்கப்பட்ட உடற்பயிற்சி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்களிடம் இருவரும் பணம் பெற்றதாகவும், ரூ.1.51 கோடியை திருப்பிக் கேட்டபோது, அவர்கள் தன்னை மிரட்டியதாக புகார் அளித்துள்ளார்.
இதன்பின் மோசடி, ஏமாற்றுதல் போன்ற புகார்களுக்கு பதில் அளித்து ஷில்பா ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ராஜ் மற்றும் என் பெயரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். அதிர்ச்சி அளிக்கிறது. சாதனையை நேராக அமைக்க, SFL ஃபிட்னஸ், காஷிஃப் கான் நடத்தும் முயற்சி.
நாடு முழுவதும் SFL ஃபிட்னஸ் ஜிம்களை தொடங்க SFL பிராண்டின் பெயரின் உரிமையை அவர் பெற்றிருந்தார். அனைத்து ஒப்பந்தங்களும் அவரால் செய்யப்பட்டன. மேலும் அவர் வங்கி மற்றும் அன்றாட விவகாரங்களில் தொடர்பாக கையெழுத்திட்டார். அவருடைய பண பரிவர்த்தனைகள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. அதற்காக அவரிடமிருந்து ஒரு ரூபாய் கூட நாங்கள் பெறவில்லை.
SFL ஃபிட்னஸ் குறித்து அனைத்து உரிமையாளரும் நேரடியாக காஷிப்புடன் தொடர்பு கொள்கின்றனர். இந்த நிறுவனம் 2014-இல் மூடப்பட்டது என்றும் முற்றிலும் காஷிப் கானால் கையாளப்பட்டது எனவும் ஷில்பா ஷெட்டி ட்வீட் செய்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…