தற்கொலைக்கு தூண்டியதாக கர்நாடக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு..!
கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே எஸ் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம் சாட்டிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டில் என்பவர் உடுப்பி பகுதியில் உள்ள லாட்ஜில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த ஒப்பந்ததாரர் சந்தோஷின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளான பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தற்கொலை செய்து கொண்ட சந்தோஷ் பாட்டில், தற்கொலைக் தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், , தனது மரணத்திற்கு ஈஸ்வரப்பா தான் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதால் இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.