மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணைந்தார்.ஆனால் இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 22 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
இதில் சபாநாயகர் நர்மதா பிரசாத் 6 பேரின் ராஜினாமாவை ஏற்றார். மீதமுள்ள 16 பேரின் ராஜினாமா இதுவரை ஏற்கவில்லை.இந்நிலையில் ஆளுநர் லால்ஜி டாண்டன் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு காங்கிரஸ் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.இதையெடுத்து மத்தியப்பிரதேச சட்டப்பேரவை கூடியது. ஆனால் சட்டப்பேரவை கூடிய சில மணி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நடைபெற இருந்த கமல்நாத் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு தாமதம் செய்து வருவதாக கூறி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக சார்பில் முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மனு தாக்கல் செய்தார் .இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.வழக்கின் விசாரணை தொடர்பாக இன்று காலை 10.30 மணிக்கு கமல்நாத் அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…