பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு – சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் கைது!
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் பர்மதி எக்ஸ்பிரஸின் எஸ்-6 கோச் கோத்ராவில் எரிக்கப்பட்டதில் 59 பேர் கொல்லப்பட்டனர்.கோத்ரா ரயில் சம்பவத்திற்கு அடுத்த நாள் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்ட நிலையில்,அதில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி எஹ்சான் ஜாஃப்ரியும் ஒருவர் .
இதனையடுத்து,குஜராத் கலவர வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட நிலையில்,இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.காரணம்,பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டப்பட்டு இருந்ததே இதற்கு காரணம்.ஏனெனில்,அந்த சமயத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி.
ஆனால்,குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வு) அறிவித்த நிலையில்,இதனை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்பி எசன் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கில் பிரதமர் மோடி மீதான குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் பிரதமருக்கு எதிராக தீர்ப்பு வந்திருந்தால்,பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருந்த நிலையில்,மனு தள்ளுபடி செய்யபட்டது.
இந்நிலையில்,முன்னாள் காங்கிரஸ் எம்பி எசன் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரிக்கு உதவியாக இருந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும்,குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார் என்பவரையும் அகமதாபாத் குற்றப் பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது.
யார் இந்த டீஸ்டா செடால்வட்?:
டீஸ்டா செடல்வாட்,மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவர்.குஜராத் கலவரத்திற்குப் பிறகு 2002 இல் நிறுவப்பட்ட நீதி மற்றும் அமைதிக்கான என்ஜிஓ (CJP) இன் நிறுவன அறங்காவலரும் செயலாளராகவும் உள்ளார்.குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை எடுத்துக் கொண்ட சமூக செயல்பாட்டாளர்களில் இவரும் ஒருவர்.குற்றவியல் சதி,மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#WATCH | Gujarat ATS team with detained Teesta Setalvad reached Crime Branch, Ahmedabad, early morning today. She was taken into custody yesterday, June 25, in relation to a case on her NGO pic.twitter.com/eclvhuiFmN
— ANI (@ANI) June 26, 2022
அந்த வகையில்,கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம்,குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு குற்றவியல் விண்ணப்பத்தில்,குஜராத் கலவரம் தொடர்பாக அப்போதைய முதல்வர் மோடி மற்றும் 61 அரசியல்வாதிகள்,அதிகாரிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் கோரிய ஜாகியா ஜாஃப்ரியின் இணை மனுதாரராக டீஸ்டா தன்னைக் குறிப்பிட்டிருந்தார். மேலும்,மோடிக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.