ஷாருக்கான் பட பாடல் போஸ்டரில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.? சிக்கிக்கொண்ட நெட்டிசன்.!

Default Image

ஷாருக்கான் பட பாடலான பதான் பாடல் போஸ்டரில் தீபிகா படத்திற்கு பதில் யோகி ஆதித்யநாத் புகைப்படத்தை பதிவிட்ட நெட்டிசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பதான் படத்தில் இருக்கு பேஷாரம் ரங் எனும் பாடல் வெளியாகி சர்ச்சையாகி வருகிறது. அதிலும், குறிப்பாக, அதில் தீபிகா அணிந்துள்ள ஆடைகள் பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த பாடலை நீக்க வேண்டும் என பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இதில் கூடுதல் சர்ச்சை கிளப்பும் வகையில்,  பேஷாரம் ரங்’ பாடலின் போஸ்டரில் தீபிகா படுகோனே படத்திற்கு பதில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகைப்படத்தை பதிவிட்டு ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்து விட்டார்.

அது பாஜகவினர் மத்தியில் பலத்தை எதிர்ப்பபை உண்டாகியுள்ளது. அந்த நெட்டிசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி பாஜகவினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த டிவிட்டர் ஐடி மீது எப்ஐஆர் பதிவு செய்து சைபர் குழு விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்