முடிந்தது விசா கால கெடு.., புதுச்சேரியில் பாகிஸ்தான் பெண் மீது வழக்கு.!
முவிசா கால கெடு முடிந்தும் நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தான் பெண் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலக்கெடு குறித்து முக்கிய உத்தரவு வெளியானது. SAARC விசா உள்ளவர்கள் நேற்று முன் தினம் (ஏப்.26) நள்ளிரவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
வணிக, பத்திரிகையாளர், மாணவர் உள்ளிட்ட விசா உள்ளவர்கள் நாளைக்குள்ளும், மருத்துவ விசா உள்ளவர்கள் நாளை 29-க்குள் வெளியேற வேண்டும். இனி எந்த புதிய விசாவும் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டள்ளது.
நேற்று விசா கெடு முடிவதால் இந்தியாவிலிருந்து 419 பாகிஸ்தானியர்கள் வாகா எல்லை வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும், விசா கால கெடு முடிந்தும் நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தான் பெண் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த ஹனிஃப் கான் மனைவி பஃவ்சியா பானு (பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்) விசா 2022ஆம் ஆண்டு முடிந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறாததால் லாஸ்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.