அமலாக்கத்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ! இன்று மீண்டும் விசாரணை

Default Image

சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில்  அமலாக்கத்துறைக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி உய்ரநீதிமன்றத்தில்  முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில்மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது .ஓன்று  சிபிஐக்கு எதிராகவும்,அமலாக்கத்துறைக்கு எதிராகவும் தாக்கல் செய்யபப்பட்டது.ஆனால் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்த  நிலையில் சிபிஐக்கு எதிராக தாக்கல்  செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.இதில் நேற்று  பகல் 12 மணி வரை சிதம்பரத்தை  கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

பின்னர் நேற்று  இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது .வழக்கு விசாரணையை இன்று  ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது .மேலும்  அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை இன்று  வரை கைது செய்ய தடை விதித்தது உச்சநீதிமன்றம்.மேலும் சிபிஐ கைது செய்ததற்கு எதிராக சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையும் இன்று நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்