கர்நாடகாவில் விஸ்வரூபமெடுக்கும் போலி ஆவண விவகாரம்.! முதலமைச்சர் மீது காவல்துறையில் புகார்.!

Karnataka CM Siddaramaiah

மைசூரு: போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி மற்றும் உறவினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி மற்றும் அவர்களது உறவினர் என மொத்தம் 9 பேர் மீது போலி ஆவணங்கள் தயாரித்ததற்காக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (Mysore Urban Development Authority – MUDA) அரசு நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பயன்படுத்தியதாக இந்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா என்பவர் இந்த புகாரை மைசூருவில் உள்ள விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அரசு கையகப்படுத்தும் பட்டியலில் இருந்த குறிப்பிட்ட நிலமானது போலி அவனங்களினால் அது வேறு ஒருவருக்கு சொந்தமானதாக பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

1998ஆம் ஆண்டே அரசு கையகப்படுத்துதல் பட்டியலில் இருந்து அது விடுவிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், 2010ஆம் ஆண்டு அரசு நிலம் கையாகப்படுத்தும் பட்டியலில் கூட அந்த குறிப்பிட்ட நிலம் பட்டியலிடப்பட்டு இருந்தது என்றும் பல்வேறு குற்றசாட்டுகளை அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா , அவரது மனைவி பார்வதி, நில உரிமையாளர் அவரது மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி தேவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன. இதே போல புகார் மாநில ஆளுநர், தலைமை செயலர், வருவாய்த்துறை செயலர் ஆகியோருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்