முறையான சம்பளம் & பிபிஇ கிட் கேட்டு போராடிய தூய்மை பணியாளர்கள் மீது வழக்கு!
டெல்லியில் முறையான சம்பளம் மற்றும் பிபிஇ கிட் கேட்டு போராடிய 100 தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்கு பதிவு.
டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் பிபிஇ கிட் ஆகியவை முறையாக தருமாறு கேட்டு போராடிய 100 தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து பேசிய தூய்மை பணியாளர்களில் ஒருவர் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும், பாதுகாப்பு கவச உடைகள் வழங்க வேண்டும் என்று பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை ஒன்றும் இல்லை.
இதனால்தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம் என கூறியுள்ளார். ஜூலை 21-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்திய இந்த தூய்மைப் பணியாளர்கள் மீது கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு வழிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.