கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி கோர விபத்து..!

Kanchanjungha

டார்ஜிலிங்: டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பன்சிதேவா பகுதியில் சரக்கு ரயில் மீது கன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மோதியதில் அதிகம் பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.

இன்று மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பன்சிதேவா பகுதியில் சரக்கு ரயில் மீது மக்களை ஏற்றி செல்லும் கன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மோதி இருக்கிறது. இதில் ரயில் தடம் புரண்டதால் கோர விபத்து அரங்கேறி உள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து மேற்கு வாங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவரது க்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவர் அந்த பதிவில், “டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ஃபன்சிடேவா பகுதியில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேற்கொண்டு விவரங்களுக்காக காத்திருக்கிறேன்.

மேலும், சம்பவ இடத்திற்கு மீட்பு பனி குழுவினரும் மற்றும் மருத்துவ உதவிக்காக டிஎம், எஸ்பி, மருத்துவர்களும், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பேரிடர் குழுவும் விரைந்துள்ளனர்.  மேலும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என பதிவிட்டிருந்தார். மேலும், இதில் பயணித்தோர், பலியானோர் எண்ணிக்கை என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்